உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா? பாகம்-1


உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?

வங்கி சேமிப்பு கணக்கில் ( savings Bank account ) பெரும் தொகையை வைத்திருப்பவரா நீங்கள்? அதனை நீங்கள் தீவிரமாக கண்காணிப்பதில்லையா?, உங்கள் சேமிப்பு வளர வேண்டுமா?, தொடர்ந்து படியுங்கள்!
நம்மில் பலர், வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் நமது வங்கி சேமிப்பு கணக்கினை அதிகம் கண்காணிப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் அதில் அதிகமாகவே பணம் இருப்பதுண்டு.

இந்த வகை கணக்கில் இருப்பு வைக்கும் தொகைக்கு வங்கிகள் மிக குறைந்த வட்டியையே ( Interest )  வழங்குகின்றன.


எனவே, பெரிய அளவில் இந்த கணக்கில் பணத்தை விட்டு வைத்தால் அது வளராமல் முடங்கிப்போகும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக வங்கிகளில் `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்’ Auto sweep account என்றொரு வசதி இருக்கிறது.


உங்களது சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணமிருந்தால் அதனை புதிய ஒரு நிரந்தர வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்து கொள்ளும் வசதிக்கு `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்என்று பெயர்.


சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் இந்த `ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட்’ Auto sweep account வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது, சேமிப்பு கணக்கிற்கு, வங்கிகள் வெறும் 4 சதவீத வட்டியையே வழங்கி வருகின்றன. உதாரணமாக, 180 நாட்களுக்கு நிரந்தர வைப்பு நிதி Fixed deposit திட்டத்தில் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த ஆட்டோ ஸ்வீப் அக்கவுண்ட் வசதி மூலம் உங்கள் சேமிப்பு இரு மடங்கு வேகத்தில் வளர வாய்ப்பாகிறது.


No comments:

Post a Comment